பேபி பொட்டேட்டோ பிரியாணி
தேவையானவை:
பேபி பொட்டேட்டோ -200 கிராம் (வேக வைத்து தோல் உரிக்கவும்)
பாஸ்மதி அரிசி - அரை கிலோ
பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் - 2
டொமேட்டோ பியூரி - 75 மில்லி
இஞ்சி-பூண்டு விழுது - 1 டேபிள்ஸ்பூன்
பச்சை மிளகாய் - 2 (பொடியாக நறுக்கவும்)
கரம்மசாலாத் தூள் - அரை டீஸ்பூன்
மல்லித்தூள் (தனியாத்தூள்) - அரை டேபிள்ஸ்பூன்
மிளகாய்த்தூள் - 1 டேபிள் ஸ்பூன்
மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன்
தயிர் - 3 டேபிள்ஸ்பூன்
ஏலக்காய் - 2
பட்டை - 2
கிராம்பு - 2
பிரிஞ்சி இலை - 1
கொத்தமல்லித்தழை - 50 கிராம்
புதினா இலை - 50 கிராம்
தண்ணீர் - தேவையான அளவு
எலுமிச்சைப்பழம் - ஒன்று (சாறு எடுக்கவும்)
நெய் - 50 கிராம்
எண்ணெய் - 50 மில்லி
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
பாஸ்மதி அரிசியை 30 நிமிடம் ஊற வைக்கவும். அடுப்பில் வாயகன்ற பாத்திரத்தை வைத்து, எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரிஞ்சி இலை சேர்த்து சிவக்க வறுக்கவும். அதில் இஞ்சி-பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போக வதக்கியதும், வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும். இத்துடன் உருளைக்கிழங்கு, உப்பு, மஞ்சள் தூள், கரம் மசாலாதூள், மிளகாய்த்தூள், மல்லித்தூள் (தனியாத்தூள்) சேர்த்து நன்கு வதக்கவும். இதில் தயிர், டொமேட்டோ பியூரி சேர்த்து கிரேவி பதம் வரும் வரை லேசாக கிளறிவிடவும். இத்துடன் தண்ணீர் ஊற்றி, பாஸ்மதி அரிசியைச் சேர்த்து உப்பு போட்டு ஐந்து நிமிடம் வேக விடவும். பிறகு நெய், எலுமிச்சைச் சாறு ஊற்றி கொத்தமல்லித்தழை மற்றும் புதினா இலைதூவி மூடவும். அடுப்பில் ஒரு பெரிய தோசைக்கல்லை வைத்து தீயை முற்றிலும் குறைத்து அதன் மேல் பிரியாணி பாத்திரத்தை வைத்து 20 நிமிடம் தம் போட்டு இறக்கிப் பரிமாறவும்.