கடலைப் பருப்பு வடை


கடலைப் பருப்பு பாதி, பட்டாணிப் பருப்பு பாதி ஒரு ஸ்பூன் உளுந்து, ஒரு ஸ்பூன் அரிசி சேர்த்து ஒரு மணி நேரம் ஊற வைத்து, உப்பு, பச்சைமிளகாய் பாதி, காய்ந்த மிளகாய் பாதி சேர்த்து சற்று கொரகொரப்பாக அரைக்கவும்.

அரைப்பதற்கு முன்பு 4 டேபிள்ஸ்பூன் ஊறிய முழு கடலைப்பருப்பைத் தனியே எடுத்து வைத்துக்கொண்டு அரைத்த மாவுடன் கலந்து வெங்காயம், கறிவேப்பிலை, மல்லி, புதினா நறுக்கிப் போட்டு பெருங்காயம் சேர்த்து வடை தட்டினால், ஆறிய பின்பும் சாப்பிட ‘கிரிஸ்ப்பி’யாகவும் சுவையாகவும் இருக்கும். பிக்னிக், சுற்றுலா போன்று பயணம் போகும் போது எடுத்துச் செல்லலாம்.