சமையல் டிப்ஸ் டிப்ஸ்:!!!
1. பருப்பு அவிக்கும்போது, சிறிது நல்லெண்ணெய் விட்டால், எளிதாக வெந்துவிடும்.
2. நெல்லிக்காய் ஊறுகாயில் சிறிது எலுமிச்சைசாறு சேர்த்தால், எளிதில் கெடாது..
3. இட்லிக்கு உளுந்து அரைக்கும்போது ஐஸ்வாட்டர் விடவும். மாவு சூடாகாமல் .. இட்லி பூப்போன்று வரும்.
4. சப்பாத்திக்கு மாவு பிசையும்போது, லேசாக சூடான பாலை சேர்த்துக்கொண்டு பிசைந்தால், சப்பாத்தி மிருதுவாக இருக்கும்.
5.. குழம்பில் காரம் அதிகமாகிவிட்டால், உருளைக்கிழங்கை வேக வைத்து, மசித்து சேர்த்து கொதிக்கவிட்டு இறக்குங்கள்.
6.சர்க்கரைப் பாகில் எலுமிச்சைசாறு சேர்த்தால், சீக்கிரம் கெட்டியாகாது. பூத்துப்போகாது
.7.. ரோஜாப்பூவை விரும்பாத பெண்கள் யாரும் இருக்கமாட்டார்கள். இந்தப் பூவை முகர்ந்து பார்த்தாலே தலைவலி, தலை பாரம் போன்ற சின்னச் சின்ன பிரச்சினைகள் நீங்கும். இதழ்களை மென்று தின்றால், வாய்ப்புண், துர்வாடை அகலும். ரோஜாப்பூவை சாறாக அல்லது கசாயமாக குடித்துவந்தால், பெண்களின் கருப்பை வலுவடையும்.அத்துடன் மாதவிலக்கு நேரத்தில் ஏற்படும் வலி, அதீத ரத்தப்போக்கு நீங்கும்.
* கிச்சனில் பாட்டில் துர்நாற்றம் வீசுகிறதா? அதில் சிறிது கடுகு போட்டு, வெந்நீர் ஊற்றவும். சிறிது நேரம் கழித்துக் கழுவினால், துர்நாற்றம் போய்விடும்.
* பயறு வகைகளை ஊறப்போட மறந்துவிட்டீர்களா? கவலையே வேண்டாம். பயறை ஹாட் பேக்கில் போட்டு தேவையான அளவு வெந்நீர் ஊற்றி மூடவும். ஒரு மணி நேரம் கழித்து எடுத்து , வழக்கம்போல குக்கரில் வேகவைத்துப் பயன்படுத்திக்கொள்ளவும்.
* கேக் செய்யும்போது முந்திரிப் பருப்பு, பாதாம், பிஸ்தா போன்றவற்றை பாலில் ஊறப்போட்டு பிறகு சேர்த்தால், கேக்கிலிருந்து உதிர்ந்து விழாமல் இருக்கும்.
* வாழைப்பூவை ஆய்ந்ததும் மிக்ஸியில் போட்டு இரண்டு சுற்று சுற்றினால், பூப்பூவாக வரும்.
* புதிதாக அரைத்த மிள்காய்த் தூளில், சிறிது சமையல் எண்ணெய் விட்டு கிளறி வைத்தால், கார நெடி இல்லாமல் சுவை கூடும்.
* வெண்டைக்காய்ப் பொரியல் செய்யும்போது சிறிது சீரகத்துடன் தேங்காய்த் துருவலை சிவக்க வறுத்து , பொடியாக்கிப் போட்டால், பொரியல் மணமாகவும் ருசியாகவும் இருக்கும்.
* பேக்கிங் அவனில் கேக் கலவைகளை வைத்த பிறகு ‘ கேக் வெந்திருக்கிறதா’ என்று தெரிந்துகொள்ள அவசரப்பட்டு, குறிப்பிட்ட நேரத்துக்குமுன், வெளியே எடுக்கக்கூடாது. அப்படி எடுத்தால், கேக்கின் வடிவமும் சுவையும் மாறிவிடும்.
* மணத் தக்காளி வற்றல் குழம்பு செய்யப் போகிறீர்களா? தாளிக்கும்போது இரண்டு உளுந்து அப்பளங்களையும் தாளிக்கும் எண்ணெயில் போட்டு , அப்பளம் நன்றாகப் பொறியும்வரை வறுத்து, பிற்கு புளியைக் கரைத்து ஊற்றி வற்றல் குழம்பு செய்யவும். புதுச் சுவையோடு குழம்பு மணக்கும்.
* உளுந்து வடைக்கு மாவு அரைக்கும்போது, முதலில் மிக்ஸியில் ஒரு ஸ்பூன் நல்லெண்ணெய் விட்டு தடவிக்கொண்டு பிறகு உளுந்தைப் போட்டு அரைக்கவும். ஒட்டாமல் வரும்.
* மீந்துபோன சாதத்தில் தண்ணீர் ஊற்றினால், ஊறி மாவு போல கூழாகிவிடும். தண்ணீருடன் இரண்டு டீ ஸ்பூன் மோர் கலந்துவிட்டால், மறுநாளும் சாதம் மல்லிகைப்பூப் போல உதிர் உதிராக வரும்.
* நமத்துப்போன பிஸ்கட்டுகளை அப்படியே ஒரு ப்ளாஸ்டிக் பையில் போட்டு, ஒரு மணி நேரம் ஃப்ரிஜ்ஜில் வைத்துப் பாருங்களேன். பிஸ்கட் கரகர, மொறுமொறுவென இருக்கும்.
* காபித்தூள் பாக்கெட்டை பிரிக்காமல் அப்படியே ஃப்ரிஜ்ஜில் வைத்து விடவும். எப்போது எடுத்தாலும், அதே மணம்! அதே குணம்!
* முருங்கை இலையைக் கிள்ளுவது கஷ்டம்தான். ஒரு ஈரத்துணிக்குள் முருங்கை கொத்தை இறுக்கமாகக் கட்டி இரவு முழுவதும் வைத்திருந்து காலையில் பிரித்தால், இலைகள் நன்றாக உதிர்ந்திருக்கும்.
* சுரைக்காய், பரங்கிக்காய், பூசணிக்காயைக் குழந்தைகள் சாப்பிடுவதில்லையா? அவற்றை அப்படியே மிக்ஸியில் அரைத்து அடை மாவில் கலந்து அடையாக வார்த்துக் கொடுக்கலாம். விரும்பி சாப்பிடுவார்கள்.
* அப்பம் செய்யும்போது வட்டமாக வராவிட்டாலோ, கடினமாக இருந்தாலோ, மாவின் அளவுக்கேற்ப சூடான பால் விட்டுக் கலந்துகொள்ளவும். அப்பம் மெத்தென வட்டமாக வரும்.
* பிரியாணி செய்யும்போது , குக்கர் மூடியைத் திறந்ததுமே, எலுமிச்சைச் சாறை சிறிதளவு விட்டுக் கிளறி விடவும். பிரியாணி பொலபொலவென இருக்கும்.
* வெண்டைக்காய்ப் பொரியலுக்கு நறுக்கும்போது, அப்படியே வைத்து வட்டவட்டமாக நறுக்கக்கூடாது, நீளவாக்கில், பிளந்துவிட்டு பிறகு நறுக்கினால், உள்ளே புழு, பூச்சி இருந்தால், தூக்கி எறிந்து விடலாம்.
* பொடி வகைகளில் உப்பு அதிகமகிவிட்டால், குறிப்பிட்ட பொடி வகையில் உள்ள பருப்பு எதுவோ அதை தேவைக்கேற்ப கொஞ்சம் எடுத்துக்கொள்ளவும். அதை கடாயில் வறுத்து, பொடியாக்கி, பொடி வகையுடன் கலந்தால் சரியாகிவிடும்.
*தக்காளி சூப் செய்யும்போது, ஒரு சிறிய துண்டு பீட்ரூட்டை வேகவைத்து சேர்த்தால், சூப் நல்ல சிகப்பு நிறத்தில் இருக்கும்.
* ஜவ்வரிசியை அரை மணி நேரம் ஊறவைத்து, அதை மசால்வடை மாவில் கலந்து வடை சுட்டால், சுப்பர் சுவை. சுடச்சுட சாப்பிட்டுவிடவேண்டும்.ஆறவிட்டால், ஜவ்வரிசிவடை ஜவ்வு வடையாகிவிடும்.
* சூப் நீர்த்துப் போய்விட்டால், வேகவைத்த உருளைக்கிழங்கை மசித்து சூப்பில் கலக்கவும். சூப் கெட்டியாகிவிடும். சுவையும் கூடும்.
* மசால்வடை மாவு நீர்த்துப்போய்விட்டதா?இரண்டு ரொட்டித் துண்டுகளை மிக்ஸியில் பொடியாக அரைத்து, வடை மாவுடன் சேர்க்கவும். பிறகு வடை தட்டினால், பிரமாதமாக வரும்.
* பூசணிக்காய் அல்வா செய்வதற்குமுன், காயின் மேல்தோலை சீவி, ஃரிஜ்ஜில் அரைமணிநேரம் வைக்கவும். பிறகு அதைத் துருவினால், ஒரே சீராக வரும். அல்வாவும் சுவையாக , கெட்டியாக இருக்கும்.
* திரட்டுப்பால் செய்யும்போது, சிறிய மெல்லிய எவர்சிவர் தட்டை அதனுள் போட்டுவிட்டால், பால் பொங்காமலும், அடிப் பிடிக்காமலும் கிளறவரும்.
* கேஸ் சிலிண்டரை ஒரு தெர்மாகோல் ஷீட்டின் மீது வைத்துவிட்டால், தரையில் கீரல், கரை ஏற்படாது. நகர்த்துவதும் எளிது.
* கூட்டு , பருப்பு, சாம்பார், லேசாக அடிப் பிடித்துவிட்டதா? அதைவேறு பாத்திரத்துக்கு மாற்றி, அரைமூடி எலுமிச்சை சாறு ஊற்றிக் கிளறவும். தீய்ந்த வாசனை வராது.
* பாகற்காய், வாழைத் தண்டு, வாழைப்பூ இவற்றை முதலில் களைந்த அரிசித் த்ண்ணீரில் 15 நிமிடம் போட்டு வைக்கவும்.பிறகு வேறு தண்ணீரில் அலசிவிட்டு சமைத்தால், கசப்பு குறையும். நிறம் மாறாது.
* கடலை மாவு, அரிசி மாவு கலந்து பஜ்ஜி செய்வதற்கு பதிலாக, கடலைப் பருப்பையும் பச்சரியையும் ஊறவைத்து, பெருங்காயம், மிளகாய் வற்றல், உப்பு சேர்த்து அரைத்துச் செய்தால், தனி ருசி.
* கைகளில் 3 சொட்டு எண்ணெய் தடவிக்கொண்டு, ப்லாக் கொட்டைகளை நன்றாகக் கைகளில் வைத்து தேய்த்து, வைத்துவிடவும். மறுநாள் பலாக் கொட்டைகளின் தோலைஉரிப்பது எளிதாக இருக்கும்.
* மரவள்ளிக் கிழங்கில் வறுவல் செய்யும்போது, பச்சையாக சீவி வறுக்காமல், 5 நிமிடங்கள் ஆவியில் வைத்து எடுத்தபின் வறுத்தால், மொறுமொறுவென்று ருசியாக இருக்கும்.
* ஜவவ்ரிசி பாயசம் செய்வதற்கு முன் ஜவ்வரியை லேசாக வறுக்கவும். அதில் வெந்நீரை ஊற்றி அரை மணி நேரம் அப்படியே வைத்திருக்கவும். பிறகு பாயசம் செய்தால், விரைவில் வெந்துவிடும். கேஸ் செலவும் மிச்சமாகும்.