பச்சைப்பயறு கடைசல்

பச்சைப்பயறு கடைசல்

என்னென்ன தேவை?

பச்சைப்பயறு -1/4 கப்,
சாம்பார் வெங்காயம் - 10,
தக்காளி - 2 (அரிந்தது),
பச்சைமிளகாய் - 4,
பூண்டு - 10 பல்,
உப்பு - தேவைக்கு.

தாளிக்க...

எண்ணெய் - 2 டீஸ்பூன்,
கடுகு - 1 டீஸ்பூன்,
உளுத்தம்பருப்பு - 2 டீஸ்பூன்,
காய்ந்த மிளகாய் - 2,
கறிவேப்பிலை - சிறிது,
தனியா - 1 டீஸ்பூன்,
சீரகம் - 1/2 டீஸ்பூன்.

அலங்கரிக்க...

கொத்தமல்லித்தழை,
கறிவேப்பிலை - சிறிது.

எப்படிச் செய்வது?

குக்கரில் பச்சைப்பயறு, சாம்பார் வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய், பூண்டு, உப்பு போட்டு தேவையான தண்ணீர் விட்டு 4 விசில் விட்டு நன்றாக வேக வைக்கவும். பிறகு அதனை பருப்பு மத்தால் மசித்து தாளிக்க கொடுத்தவற்றை தாளித்து சேர்க்கவும். சூடான சாதம், சப்பாத்திக்கு ஏற்றது. பச்சை மிளகாய்க்கு பதில் வரமிளகாய் சேர்த்தும் அரைக்கலாம்.