சின்ன வெங்காயம் பொரிச்ச குழம்பு

சின்ன வெங்காயம் பொரிச்ச குழம்பு

தேவையானவை:

சின்ன வெங்காயம் - 100 கிராம்
புளி - 20 கிராம்
பூண்டு - 10 பல்
உப்பு - தேவையான அளவு
வெல்லம் - 1 டீஸ்பூன்
கொத்தமல்லித்தழை - சிறிதளவு
தண்ணீர் - 200 மில்லி
மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன்
சீரகத்தூள் - அரை டீஸ்பூன்

தாளிக்க:

கடுகு - கால் டீஸ்பூன்
எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்
சீரகம் - கால் டீஸ்பூன்
நறுக்கிய பச்சை மிளகாய் - 1
கறிவேப்பிலை - சிறிதளவு
பெருங்காயத்தூள் - முக்கால் டீஸ்பூன்

வறுத்து அரைக்க:

தேங்காய் - அரை மூடி
வெந்தயம் - அரை டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 2
மல்லி (தனியா) - 1 டேபிள்ஸ்பூன்

செய்முறை:

புளியைத் தண்ணீரில் கரைத்து வைக்கவும். வறுத்து அரைக்க வேண்டியதை எண்ணெய் விடாமல் வறுத்து மிக்ஸியில் அரைத்து வைக்கவும். கடாயை வைத்து, எண்ணெய் ஊற்றி சின்ன வெங்காயம், பூண்டு சேர்த்து நிறம் மாற வதக்கவும். வெங்காயத்தின் தோல் உரிய ஆரம்பிக்கும் போது, வறுத்தரைத்தக் கலவையைச் சேர்த்துக் கிளறவும். இதில் மஞ்சள்தூள், சீரகத்தூள் சேர்த்து வதக்கவும். புளிக் கரைசலை ஊற்றவும். நன்கு கொதித்ததும் உப்பு, வெல்லம் சேர்க்கவும். பிறகு தாளிக்க வேண்டிய பொருட்களைத் தாளித்து சேர்த்து கொத்தமல்லித்தழை தூவிப் பரிமாறவும்.