பலாப்பழ பிரியாணி
தேவையானவை:
பலாச்சுளைகள் - 250 கிராம்
பலாக்காய் - 150 கிராம்
பட்டை - 1
கிராம்பு - 3
ஏலக்காய் - 2
உப்பு - சிறிதளவு
தயிர் - 50 மில்லி
இஞ்சி விழுது - 2 டேபிள்ஸ்பூன்
பூண்டு விழுது - 2 டேபிள்ஸ்பூன்
மஞ்சள்தூள் - 1 டீஸ்பூன்
வெங்காயம் - 3 (நீளமாக நறுக்கி, பொன்னிறமாகப் பொரித்தெடுக்கவும்)
கொத்தமல்லித்தழை - சிறிதளவு
புதினா இலை - சிறிதளவு
பாஸ்மதி அரிசி - 1 கிலோ
அரைக்க:
கொத்தமல்லித்தழை - அரைக் கட்டு
புதினா இலை - 1 கட்டு
பச்சை மிளகாய் - 2
மிளகு - 1 டீஸ்பூன்
தேங்காய்த்துருவல் - கால் மூடி
தாளிக்க:
நெய் - 100 மில்லி
சீரகம் - சிறிதளவு
சோம்பு - சிறிதளவு
பிரிஞ்சி இலை - 1
செய்முறை:
அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து தண்ணீர் ஊற்றி உப்பு, ஏலக்காய், பட்டை, கிராம்பு சேர்த்து சூடானதும் பாஸ்மதி அரிசியைச் சேர்த்து, முக்கால் வேக்காடு வெந்ததும், வடித்து ஆற விடவும். அரைக்கக் கொடுத்தவற்றை மிக்ஸியில் மையாக அரைத்து எடுக்கவும். பலாச்சுளைகளைப் பொடியாகவும், பலாக்காயை நீளமாகவும் நறுக்கி வைக்கவும். அடுப்பில் எண்ணெய்ச் சட்டியை வைத்துத் தாளிக்கக் கொடுத்தவற்றைத் தாளித்து, இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போனதும், பலாக்காயைச் சேர்த்து லேசாக வதக்கவும். இதில் மஞ்சள்தூள், அரைத்த விழுது சேர்த்து வதக்கி, சிறிது தண்ணீர் ஊற்றி, நன்கு கொதிக்க விடவும். கலவை நல்ல வாசனை வரும் போது தயிர், உப்பு சேர்த்துக் கலக்கவும். சிறிது நேரம் கழித்து வடித்த அரிசியை அரை பங்கு கலவையில் சேர்க்கவும். இதன் மேல் வெங்காயம், பலாப்பழம், கொத்தமல்லித்தழை, புதினா இலை தூவவும். மஞ்சள்தூளை சிறிது தண்ணீரில் கரைத்து, பிரியாணியின் மேல் தெளித்து விடவும். இதற்கு மேல் மீதம் இருக்கும் மற்ற கலவைகளை மேலே சொல்லியபடி தூவவும். இறுதியாக சிறிது மஞ்சள்தூள் தூவி மூடி போடவும். அடுப்பில் ஒரு தோசைக்கல்லை வைத்து அதன் மேல் பிரியாணி பாத்திரத்தை வைக்கவும். சிம்மில் அரை மணி நேரம் வைத்து எடுத்தால், அருமையான பலாப்பழ பிரியாணி ரெடி.