பண்டிகை பச்சடி
தேவையானவை:
பழுத்த மாம்பழம் - 2, பொடித்த வெல்லம் - அரை கப், பச்சை வேப்பம்பூ - 2 ஆர்க்கு, மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன், நெய் - ஒரு டீஸ்பூன், சிறிய பச்சை மிளகாய் (கீறியது), காய்ந்த மிளகாய் - தலா ஒன்று, கடுகு - கால் டீஸ்பூன், அரைத்த தேங்காய் துருவல் - ஒரு டேபிள்ஸ்பூன், அரிசி மாவு - ஒரு டீஸ்பூன், உப்பு - சிறிதளவு.
செய்முறை:
மாம்பழத்தை துண்டுகளாக்கி ஒரு கப் நீரில் வேகவிடவும். இத்துடன் வெல்லம் சேர்த்து, கரைந்ததும் உப்பு, மஞ்சள்தூள், தேங்காய் சேர்த்து, அரிசி மாவை சிறிது நீரில் கரைத்து ஊற்றவும். ஒரு கொதி வந்ததும் கீழே இறக்கவும். கரண்டியில் சிறிது நெய் ஊற்றி கடுகு போட்டு, வெடித்ததும் வேப்பம்பூவை போட்டு சிவக்க வறுத்து சேர்க்கவும். பச்சை மிளகாய், காய்ந்த மிளகாயை நெய்யில் வறுத்துப் போட்டு கலக்கவும்.