கீற்று மாங்காய்

கீற்று மாங்காய்

தேவையானவை:

உருண்டை அல்லது கிளி மூக்கு மாங்காய் - 2, பச்சை மிளகாய் - ஒன்று, உப்பு - தேவைக்கேற்ப, கடுகு, எண்ணெய் - தாளிக்க தேவையான அளவு.

செய்முறை:

மாங்காயை நீளவாக்கில் நறுக்கி, சிறு துண்டுகளாக்கி, கீறிய பச்சை மிளகாய், உப்பு போட்டு கலக்கவும். கடுகை எண்ணெயில் தாளித்துச் சேர்க்கவும்.