உப்பு அடை
என்னென்ன தேவை?
அரிசி மாவு - 2 கப்
இஞ்சி - சிறு துண்டு
பச்சை மிளகாய் - 3
எண்ணெய் - 4 டீஸ்பூன்
கடுகு - அரை டீஸ்பூன்
உளுந்து - 2 டீஸ்பூன்
பெருங்காயத் தூள் - ஒரு சிட்டிகை
தேங்காய்த் துண்டுகள் - அரை கப்
வேகவைத்த காராமணி - 4 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு
எப்படிச் செய்வது?
அரிசி மாவை வெறும் வாணலியில் வறுத்துக்கொள்ளுங்கள். வாணலியில் எண்ணெய் விட்டுச் சூடானதும் கடுகு, உளுந்து போட்டுத் தாளியுங்கள். பிறகு பெருங்காயத் தூள், கறிவேப்பிலை, இஞ்சி, பச்சை மிளகாய் சேர்த்து வதக்குங்கள். அதில் சிறிதளவு தண்ணீர் ஊற்றி உப்பு போட்டுக் கொதிக்கவிடுங்கள். பிறகு தேங்காய்த் துண்டுகள், காரமணி போட்டு, அரிசி மாவைத் தூவி, கெட்டியாக வரும்வரை கிளறி இறக்கிவையுங்கள். நன்றாக ஆறியதும் கையில் எண்ணெய் தடவிக் கொண்டு, மாவைச் சிறிது எடுத்து வட்டமாகத் தட்டி, நடுவில் ஓட்டை செய்து, ஆவியில் வேகவைத்து எடுங்கள்.