சுரைக்காய் - அவல் தயிர் பச்சடி
தேவையானவை:
தோல் நீக்கி, பொடியாக நறுக்கிய சுரைக்காய் - ஒரு கப்
தயிர் - 2 கப்
ஊற வைத்த வெந்தயம் - ஒரு டீஸ்பூன்
அவல் - அரை கப்
பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் - கால் கப்
நறுக்கிய கொத்தமல்லித்தழை - 2 டேபிள்ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
அவலைக் கழுவி, சிறிதளவு நீர் சேர்த்து, பத்து நிமிடம் ஊறவிடவும். பிறகு, ஒரு பேஸினில் நறுக்கிய சுரைக்காய், வெங்காயம், வெந்தயம், உப்பு, கொத்தமல்லித்தழை, அவல் ஆகியவற்றைச் சேர்த்து, இத்துடன் தயிரையும் சேர்த்து நன்றாகக் கலந்துவிடவும். இதைக் காலை நேர உணவாக சாப்பிடலாம்.
தீர்வு: சுரைக்காய் உடல் எடையைக் குறைக்கும். வெந்தயம் நீரிழிவைக் குறைக்கும். வெங்காயம் குளுமை தரும்.