வெஜிடபிள் ஃப்ரைடு ரைஸ்

வெஜிடபிள் ஃப்ரைடு ரைஸ்

தேவையானவை:

பீன்ஸ், மூன்று கலர் குடமிளகாய், முட்டைகோஸ் - 250 கிராம் (சிறியதாக நறுக்கவும்)
பெரிய வெங்காயம் - 1 (அரை நிலா வடிவத்துக்கு நறுக்கவும்)
பாஸ்மதி அரிசி - 250 கிராம்
சோயா சாஸ் - 1 டீஸ்பூன்
ஸ்பிரிங் ஆனியன் - 40 கிராம்
பூண்டு - 2 பல் (பொடியாக நறுக்கவும்)
இஞ்சி - 1 இஞ்ச் பீஸ் (பொடியாக நறுக்கவும்)
மிளகுத்தூள் - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன்

செய்முறை:

பாஸ்மதி அரிசி குழைந்து, உடைந்து போகாமல் வடித்தெடுக்கவும். சாதத்தை தனியாக ஒரு ப்ளேட்டில் சிறிது நெய் அல்லது எண்ணெய் தடவி பரப்பி, ஆற வைக்கவும். அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி, இஞ்சி, பூண்டு, வெங்காயம் சேர்த்து சில நிமிடம் வதக்கவும். நறுக்கிய காய்கறிகளை இதில் சேர்த்து மிதமான தீயில் வேகும் வரை வதக்கவும். இதில் சோயா சாஸை சேர்த்து கலந்து, மிளகுத்தூள், உப்பு சேர்த்து வதக்கவும். காய்கறிகள் வெந்ததும், ஆறிய சாதத்தை சேர்த்து கலந்து ஸ்பிரிங் ஆனியன் தூவி பரிமாறவும்.