பூண்டு சூப்

பூண்டு சூப்- செய்வது எப்படி?:

தேவை:

புளித் தண்ணீர்-1 தம்ளர்; பூண்டு-10 பல்; மிளகு, ஜீரகம் –தலா 2 தேக்கரண்டி; மல்லித்தழை, கருவேப்பிலை.

செய்முறை:

புளித் தண்ணீரைக் கொதிக்க விடவும். மிளகு, ஜீரகம், பூண்டு,கருவேப்பிலை ஆகியவற்றை மிக்ஸியில் விழுதாக அரைத்து, அதில் கலக்கவும். வெண்ணெய், உப்பு சேர்த்து நன்கு கொதி வந்ததும், இறக்கி, சுத்தம் செய்த மல்லித்தழை சேர்த்து பருகலாம்.

மருத்துவ பலன்கள்:

பசியைத் தூண்டும்.
நல்ல கிருமிநாசினி.
ஆஸ்துமா, மூக்கடைப்புக்கு அருமருந்து.
கொழுப்பு, நீரிழிவு, உயர் ரத்த அழுத்தத்துக்கு நல்ல நிவாரணி.