வேர்க்கடலை சுக்கு பொடி

வேர்க்கடலை சுக்கு பொடி!!!

தேவையானவை:
வேர்க்கடலை – 200 கிராம், காய்ந்த மிளகாய் – 6, பொடித்த சுக்கு – அரை டீஸ்பூன், பெருங்காயத்தூள் – ஒரு சிட்டிகை, ஓமம் – கால் டீஸ்பூன், உப்பு – ஒரு டீஸ்பூன்.

செய்முறை:
வேர்க்கடலை, காய்ந்த மிளகாய், ஓமம், பெருங்காயத்தூள், உப்பு ஆகியவற்றை சிவக்க வறுத்துப் பொடித்து, அதனுடன் சுக்குத்தூள் கலந்து வைக்கவும். இதை சாதத்துடன் கலந்து சாப்பிடலாம், இட்லி, தோசைக்கு தொட்டுக் கொள்ளலாம். பொரியல் வகைகளுக்கும் மேல் பொடியாக உபயோகிக்கலாம்.