* ரசம் மணமாக, சுவையாக இருக்க வேண்டுமா?
ரசத்தில் பருப்பு தண்ணீர் ஊற்றி, நுரைத்து வரும்போதே இறக்கிவிட வேண்டும், கொதிக்கவிடக் கூடாது. நெய்யில் கடுகு தாளிக்கும்போது ஒரு டீஸ்பூன் மிளகுப் பொடியைப் பொரித்துச் சேர்த்தால் எந்த ரசமும் சூப்பர்தான்!
* வற்றல் குழம்பு செய்யும்போது நல்லெண்ணெயில் தாளித்து, அதிலேயே தேவையான சாம்பார் பொடி போட்டு வதக்குங்கள். பிறகு புளித் தண்ணீர், உப்பு சேர்த்து குழம்பு செய்தால் தனி வாசனையுடன் ருசியுடனும் இருக்கும்.
* வாழைக்காய் பொடிமாஸ் செய்யும்போது, வேகவைத்த வாழைக்காயை உதிர்த்துச் செய்யாமல் கேரட் துருவியில் துருவிச் சேர்த்தால் கண்ணுக்கும் விருந்து, நாவுக்கும் சுவை! இத்துடன் கேரட்டையும் சீவிப் போட்டு, பச்சை பட்டாணியை வேகவைத்து சேர்த்தால பலநிற பொடிமாஸ் உங்களுக்குப் பாராட்டை வாங்கித்தரும்.
* முட்டைகோஸை சமைக்கும்போது அதனுடன் சிறிதளவு எலுமிச்சைச் சாற்றைப் பிழிந்தால், முட்டைகோஸில் இருந்து வரும் வாடை அகன்று விடும்.
* வெண்டைக்காயை வதக்கும் போது சிறிது தயிர் சேர்த்து வதக்கினால் வழுவழுப்புதன்மை குறைவாக இருக்கும்