அப்பம்

அப்பம்
தேவையானவை:

கோதுமை மாவு - ஒரு கப், மைதா மாவு - கால் கப், அரிசி மாவு - அரை கப், துருவிய வெல்லம் - 2 கப், எண்ணெய் - பொரிப் பதற்குத் தேவையான அளவு.

செய்முறை:

வெல்லத்தை நீர் விட்டு (கால் கப்) அடுப்பில் வைத்து ஒரு கொதி வந்ததும் இறக்கி, வடிகட்டவும். வெல்லக் கரைசலில் மைதா, கோதுமை மாவு, அரிசி மாவு சேர்த்து இட்லி மாவு பதத்துக்குக் கரைக்கவும். அடிகனமான வாணலியில் எண்ணெயைக் காயவைத்து, குழிக்கரண்டியால் ஒரு கரண்டி மாவினை எடுத்து ஊற்றி, அடுப்பை `சிம்’மில் வைத்து ஒருபுறம் வெந்ததும், திருப்பிப் போட்டு வேகவிட்டு எடுத்து, எண்ணெயை வடியவிடவும்.